ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கை அரசாங்கம் பல நிபந்தனைகளுக்கு உடன்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போத அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வரிச்சலுகைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் அடி பணிந்துள்ளது.
மேலும், சமஸ்டி முறையை நடைமுறைப்படுத்துதல், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களை செயற்படுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற நிபந்தனைகளும் இதில் அடங்குகின்றன என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.