பசிலின் தேவைக்காக வீரவன்ச கைது செய்யப்பட்டாரா? மைத்திரியின் உத்தரவு என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்
289Shares

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தன்னுடன் ஒரு முன்னணியாக அரசியல் மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ச, வீரவன்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அந்த யோசனைக்கு விமல் வீரவன்ச இணக்கம் தெரிவிக்கவில்லை.

எப்படியிருப்பினும் இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்காக இணக்கத்திற்கு வந்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் தகவல்களுக்கமை தற்போது பல குற்றச்சாட்டுகள் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பசில் ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் பிரபலம் ஒருவருக்கு இடையில் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக விமல் வீரவன்ச அவற்றில் இருந்து தப்பியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி தனியாக மைத்திரி எதிர்ப்பு அரசியல் கட்சி ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலம் ஒருவரின் உதவி கிடைத்துள்ளது. இந்நிலையில் அதற்காக அவருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் நிவாரணம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வீரவன்ச இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்படவிருந்த போதிலும் இறுதி சந்தர்ப்பத்தில் உயர்மட்ட உத்தரவினால் அந்த கைது தடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியினால் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உள்ள அரசியல் அழுத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்த அழுத்தங்களுக்கும் அடிப்பணியாமல் உரிய சட்டத்தை செயற்படுத்துமாறு அந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments