ஜெயலலிதாவிற்குப் பின்னர் ரஜினி? தமிழகத்தின் அசாதாரண சூழல் குறித்து பொதுமேடையில் கவலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
335Shares

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் கவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்றைய தினம் 'துக்ளக்' இதழின் ஆண்டுவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரஜினிகாந்த் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

அவரது வாசகர்கள் மத்தியில் இன்று பேசுகிறேன். எனக்கு மிகவும் சிறந்த ஆலோசகர்கள் கிடைத்தார்கள்.

பெரிய அறிவோ, அழகோ இல்லாவிட்டாலும் எனக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

சோ மாதிரி அறிவாளியான ஒருவர் எனக்கு நண்பராக கிடைத்தார். சிங்கம் மாதிரி இருந்தவர் உடல் நலமில்லாமல் இருந்ததை பார்த்த போது கஷ்டப்பட்டேன்.

அவர் என்னுடன் மணிக்கணக்கில் பேசுவார். அப்போது நானே என் முதுகை தட்டிக்கொடுத்துக்கொள்வேன்.

சோவை மருத்துவமனையில் சென்று பார்த்த பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது சோவை மருத்துவமையில் சென்று பார்த்தார்.

அப்பொழுது அவர் நான் இருக்கிற வரைக்கும் நீங்க இருக்கணும் என்று கேட்டுக்கொண்டார். அவர் கூறியது மாதிரியே ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அவரும் உயிரோடு இருந்தார்.

எனினும் அவர் மறைந்த உடன் சில மணி நேரங்களில் மறைந்து விட்டார்.

அவர் இறந்த போது கூட மனசு கஷ்டப்படவில்லை. அந்த அளவிற்கு மனதை தயார் படுத்தி வைத்திருந்தேன்.

அவர் இறந்த பின்னர் இங்கு நடக்கிற சில அசாதாரண சூழ்நிலை நடப்பதை பார்க்கும் போது அவர் இல்லாததை நினைத்து மனசு கஷ்டப்படுகிறது. வேதனையாக இருக்கிறது. அவர் சிறந்த அறிவாளி, சில நேரங்களில் அப்பாவியாக பேசுவார்.

சோவிடம் வந்து ஆலோசனை கேட்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லையென்று கூறிவிடலாம். மாநில அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும் சிக்கலான விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்டு வருவார்கள்.

அவர் பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

அசாதாரண சூழ்நிலை ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் சோ கண்டிப்பாக இங்கே இருந்திருக்க வேண்டும். சோவின் பலம் என்பது அவரது உண்மை மட்டும் தான்.

அதையே நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை ரஜினி ரசிகர்கள் பலரும் நாளைய முதல்வரே என்று போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். ரஜினிகாந்திற்காக பேனர்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments