அனைத்து இனங்களுக்கும் தத்தமது உரிமை மற்றும் சுதந்திரம் அவசியம்! ஜனாதிபதி

Report Print Samy in அரசியல்
62Shares

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நாட்டில் அனைத்து இனங்களுக்கும் தத்தமது தேசிய அடையாளங்களையும் தத்தமது மத, கலாசார அடையாளங்களையும் வெளிப்படுத்தக்கூடிய உரிமை மற்றும் சுதந்திரம் அவசியமானதாகும். அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு டி. பி. ஜாயா மாவத்தையில் நேற்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் திணைக்கள கலாசார கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஏ. எச். ஹலீம், ரவூப் ஹக்கீம், ரிசாட் புதியுதீன், ஏ. எச். எம். பௌஸி உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து போராடியதாலேயே நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவ்வாறே நாட்டையும் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.

அனைத்து இனத்தினருக்கும் தத்தமது இனம் மதம் கலாசாரத் தனித்துவத்தைப் பேணும் சுதந்திரமுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையர் என்ற உணர்வோடு நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார்.

எமது நாடு சர்வதேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து படையினரைப் போல் ஆக்கிரமிப்பாளர்களு்கு எதிராக செயற்பட்டுள்ளதை வரலாற்றில் காண முடியும்.

1948 களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தாய் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து போராடினர். அவ்வாறு ஒன்றிணைந்தே சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களாகத் திகழ்கின்றனர்.

அந்த யுகத்தில் அவர்கள் இணைந்து போராடியதை இன்று சிலர் மறந்து செயற்படுகின்றனர்.

Comments