ரதன தேரர் நல்ல தீர்மானத்தை எடுத்துள்ளார்!

Report Print Kamel Kamel in அரசியல்
267Shares

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் நல்ல தீர்மானத்தை எடுத்துள்ளார் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இது குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

அதுரலிய ரதன தேரர் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்தமை வரவேற்கப்பட வேண்டியதாகும்.

எனினும் இந்த தீர்மானமானது அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையாது.

இந்த தீர்மானம் குறித்து மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை காணப்படுகின்றது.

அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழைக்கும் அநீதிகளின் போது ரதன தேரரின் நிலைப்பாடு கண்காணிக்கப்பட வேண்டும்.

ரதன தேரர் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அதேவேளை, அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ரதன தேரர் வரலாற்றில் இழிவான செயல்களில் ஈடுபட்ட ஓர் பௌத்த பிக்கு கிடையாது என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Comments