ரயர் உற்பத்திச்சாலை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் உத்தரவில் இடைநிறுத்தம்?

Report Print Kamel Kamel in அரசியல்
226Shares

ஹொரணை ரயர் உற்பத்திச்சாலை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் நாடு திரும்பும் வரையில் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அமைய ஹொரணையில் நிர்மானிக்கப்பட்டு வரும் பாரியளவிலான ரயர் உற்பத்திச்சாலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ரயர் உற்பத்திச்சாலைக்கான காணி வழங்குதல் நடைமுறைகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள சில சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த ரயர் உற்பத்திச்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments