மஹிந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப்!

Report Print Vethu Vethu in அரசியல்

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் உலக நாடுகளை மட்டுமன்றி, இலங்கையிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோரின் வெளிநாட்டுக் கொள்கைகளால் இலங்கைக்கு ஏற்படும் சாதக, பாதகம் குறித்த அதிகம் பேசப்பட்டது.

எனினும் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால், தமது அரசியல் வங்குரோத்து நிலையில் மாற்றம் ஏற்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பாக பலரும் சாதகமான கருத்தினை வெளியிட்டு வந்திருந்தனர். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மீது மஹிந்த அணியினர் வைத்திருந்த நம்பிக்கையின் மீது பெரும் ஏமாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் ட்ரப்பின் செயற்பாடு விமர்ச்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்பதற்கு முன்னர் மிக வேகமாக அவரது பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளதாக கலிபோர்னியாவில் வெளியாகும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Gallup என அடையாளப்படுத்தும் மக்கள் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தரவினை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் டொனால்ட் ட்ரம்பை அதிகாரத்தை வழங்குவதனை அனுமதிக்கும் வீதம் கடந்த காலங்களில் 44 வீதமாக காணப்பட்டுள்ள போதிலும் தற்போது 37 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பொதுவான நிலைமையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டனுக்கு 68 வீதமும், ஜோர்ஜ் டப்ல்யூ.புஷ்ஷிற்கு 61 வீதமும் பராக் ஒபாமாவுக்கு 83 வீத மக்கள் அனுமதி கிடைத்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க CIA புலனாய்வு பிரிவினால் வெளியிட்டப்பட்ட தகவல்களே இவ்வாறான நிலைமை ஏற்பட காரணமாகியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments