இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கு மிகவும் அபாயகரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
இதனை அரச தகவல் திணைக்களம் செய்தியாக வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைபெறும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாக இலங்கைக்கு ஐரோப்பிய சந்தைக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பை விரிவாக்குவதற்காகவே GSP பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் பெற்று கொடுப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அது அபாயகரமான நிபந்தனைகளுக்கு இணங்கியமையினால் வழங்கப்பட்ட சலுகையல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியினை ஸ்தாபிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட உற்சாகப்படுத்தலாகும் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.