ஒன்று கூடுகின்றது சிறுபான்மை கட்சிகள்: கூட்டமைப்பிற்கு பாதிப்பா?

Report Print Vino in அரசியல்
218Shares

தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய நான்கு கட்­சி­களின் தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் இன்று விசேட சந்திப்பொன்றினை நடத்தவுள்ளனர்.

குறித்த சந்திப்பானது இன்று முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இச்­சந்­திப்­பின்­போது குறித்த நான்கு கட்­சி­களும் இணைந்து வடக்கு கிழக்கு மற்றும் வடக்கு கிழக்கு வௌியே வாழும் சிறு­பான்மை தேசிய இனங்­களின் உரி­மை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான கோரிக்கைகள் அடங்­கிய வரைபினை உறுதி செய்­ய­வுள்­ளன.

குறிப்­பாக தேர்தல் முறைமை மாற்றம், மாகாண சபைக்­கான அதி­கா­ரங்கள், நிறை­வேற்று அதி­கார முறைமை உள்­ட்ட விட­யங்­களில் அதி­க­ளவு கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்ள அதே­ நேரம் மிக முக்­கி­ய­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள இரண்­டா­வது சபை அதாவது செனற் சபை, மேல் சபை நிறுவுவது தொடர்பில் புதிய சிபாரிசினையும் செய்­ய­வுள்­ளது.

13 ஆவது திருத்த சட்டமே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு என்றும் அதன் பின்னரே அடுத்தகட்டத்தினை எட்ட முடியும் என டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது இணக்க அரசியல் வழிமுறைக்கு அரசுடன் இணைந்து செயற்படுகின்ற பொழுதும் இன்னும் கூட சிறுபான்மை மக்களுக்கான தீர்வு பொறிமுறைக்கு வரவில்லை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு சிறுபான்மை காட்சிகள் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு அடுத்து பலமிக்க சிறுபான்மை கட்சிக்காக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரும் தலையிடியாகவே இருக்கப்போகின்றது.

Comments