நாட்டை ஆட்சி செய்ய இன்னும் தகுதியான ஆட்சியாளர் ஒருவர் ஆட்சிக்கு வரவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்ய தகுதியான ஒருவர் இதுவரை பதவிக்கு வராத காரணத்தினால், சகல துறைகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வித்தியாரத்ன இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.