நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் - ஜனாதிபதி

Report Print Mawali Analan in அரசியல்

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது இப்போதைக்கு முக்கிய தேவையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

அந்த வகையில் அனைத்து இனங்களுக்கும் தத்தமது கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை பேணவும் உரிமைகள் காக்கும் சுதந்திரங்களும் இருக்கின்றது.

தேசிய மக்களிடையேயும் இனங்களுக்கு இடையிலும் காணப்படும் சந்தேகம், கோபம் போன்றன விடுவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இந்த நாட்டில் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதனை தடுக்கவேண்டும். அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அந்த வகையில் நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசு திட்டமிட்டு வரும் போது ஆட்சிக்கு எதிரானவர்கள் அதனை குழப்ப நினைக்கின்றார்கள்.

பொய்யான பிரச்சாரங்களைப் பரப்பி அரசியல் இலாபங்களுக்காக ஒற்றுமையை சீரழிக்க நினைக்கின்றார்கள்.

பிரிவினைவாதத்தினை கைவிட்டு மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது மக்கள் தலைவர்களுக்கு இருக்கும் முக்கிய கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Comments