GSP பிளஸ் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது : ராஜித

Report Print Agilan in அரசியல்
45Shares

பாராளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ, எந்தவித ஒழிவு மறைவுகள் இல்லாத அரசாங்கம் ஒன்றாகவே நல்லாட்சி காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரத்ன தேரர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

குறிப்பாக தேரர் குறிப்பிடுவது போல வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் அரசாங்கம் இல்லை, அத்தோடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் நாட்டின் வரி அதிகரிப்பதை குறைக்க கூடிய நிலையே காணப்படும்.

இது போன்ற எதிர்ப்புகள் நல்லாட்சிக்கு கண்டிப்பாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் தொடர்பில் நேற்றே யோசனையொன்று முன்வைக்கப்பட்டது இதனால் GSP பிளஸ் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானதென அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை அதிர்ஷ்ட சீட்டின் விலை அதிகரிப்பது நன்மையான விடயமே. அதனால் பாரிய பிரச்சனைகள் எதுவும் தோன்ற போவதில்லை என மேலும் தெரிவித்தார்.

Comments