இலங்கையில் டிஜிட்டல் கல்வி முறைமையை மேம்படுத்துவதற்கான ஆதரவையும், அது தொடர்பிலான ஆலோசனைகளையும் வழங்க தயாராக இருப்பதாக சுவிஸ்சர்லாந்து மைக்ரோசொப்ட் கிளையின் தலைவர் பிலிப் ஷேன் கார்ட்டோஸ் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று(18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறைமையை வளர்த்தெடுப்பதற்கான முறையான தலைவர்கள் இலங்கையில் உருவாக வேண்டும்.
எதிர்காலத்தில் காகித கோப்புகள் இல்லாமல் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடே மேலோங்க வேண்டும்.
இதேவேளை வேகமான கல்வியறிவு இலங்கையில் ஏற்படுத்தவதுற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.