நிதி மோசடி பிரிவிற்கு முன்னால் பொலிஸார் குவிப்பு..!

Report Print Agilan in அரசியல்
159Shares

கொழும்பு செத்தம் வீதியில் அமைந்துள்ள நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தினை பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் உதய கம்மன்பில மற்றும் அந்த கட்சியின் உறுப்பினர்கள் பலர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக நிதி குற்ற விசாரணை பிரிவிற்குள் ஒருவரையும் நுழைய விடாமல் வீதியினை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டுவருவதால் அப்பகுதி மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியிலேயே திருடர்கள் மறைந்து வாழ்வதாகவும், அவர்களை ரணிலே பாதுகாத்து வைத்துள்ளதாகவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர போன்றவர்கள் நீதியினை கவிழ்த்துப் போட்டவர்கள் என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அங்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு தயாராகி வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments