நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பது ஜனாதிபதியின் கையில்..

Report Print Steephen Steephen in அரசியல்
43Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க கடமைப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறவில்லை.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்ததன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்றே கூறியுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Comments