நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்ன கடமையாற்றி வந்தார்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்னவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மொனராகல பிராந்தியத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரேமரட்ன கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.