2017- இலங்கைக்கு தீர்மானம் மிக்க ஆண்டு

Report Print Ajith Ajith in அரசியல்
91Shares

இலங்கைக்கு இந்த வருடம் தீர்மானம் மிக்கதொரு ஆண்டாகும் என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான விசேட மூலோபாயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்களும், புலம்பெயர் இலங்கையர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மேலும் கூறியுள்ளார்.

Comments