துப்பாக்கி பயன்படுத்தல் சட்டத்தில் திருத்தம்!

Report Print Ajith Ajith in அரசியல்
147Shares

துப்பாக்கி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தில்,நாட்டினுள் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் துப்பாக்கியினை பயன்படுத்தல்,விவசாய உற்பத்திகள் மற்றும் மற்றைய சொத்துக்களை பாதுகாப்பதற்கான துப்பாக்கிகளைபகிர்ந்தளிக்கும் போது மற்றும் பொது இடங்களில் துப்பாக்கி பயன்படுத்துவதை தடுத்தல்போன்ற காலத்துக்கு தேவையான விடயங்களை உள்ளடக்கி 1916ம் ஆண்டு 33ம் இலக்கதுப்பாக்கி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காகநியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் சிபார்சின் அடிப்படையில் குறித்தசட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதுதொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments