புதிய அரசியல் அமைப்பில் முட்டுக்கட்டை போடும் மகிந்த!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
109Shares

நாட்டில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் விடையத்தில் முட்டுக்கட்டையாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விளங்குகிறார் என சபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

புதிய அரசியலமைப்புக்கும் 13 பிளஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், நிரந்தர அமைதியையும் ஏற்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments