விசாரணைகளை மூடிமறைக்க பலர் சு.கட்சியின் அரசாங்கத்தில் இணைவு

Report Print Steephen Steephen in அரசியல்
106Shares

ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

வீடுகள் காணிகள் இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளிக்கவிருந்த 6 துண்டு காணிகளை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட ஒருவர் அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

புத்தளம் ஆடிகாம்ம் - சீரியன்கள்ளி வீதியை செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணி மோசடிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்சவும் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டும்.

விமல் வீரவங்ச அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரது உத்தரவின் பேரிலேயே பிரியங்கர ஜயரத்னவுக்கு காணிகளை ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

காணிகள் மோசடி செய்யப்பட்டமைக்கான பொறுப்பு வீடமைப்பு அதிகார சபைக்கும் உள்ளது எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Comments