அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்
63Shares

அரச நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் ஊடாக 150 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக இலஞ்ச ஆணைக்குழுவிடமும் முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கொள்வனவு செய்யவிருந்த A350/900 ஏயார் பஸ் விமானங்கள் மூன்றின் கொள்வனவை இரத்துச் செய்ததன் மூலம் அரசுக்கு 98 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியமை, அந்த கொடுக்கல் வாங்கலில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் 10 மில்லியன் டொலர் தரகு பணத்தை பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக ஜனாதிபதி எடுக்க போகும் நடவடிக்கை குறித்து கூட்டு எதிர்க்கட்சி உன்னிப்பாக அவதானித்து வரும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

Comments