வீரவங்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் கைதை கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பிவித்துரு ஹெல உறுமய ஒழுங்கு செய்திருந்தது.

விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டது போல், பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசூ மாரசிங்க ஆகியோரும் கைது செய்யப்பட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments