விசாரணை நீதிமன்றங்கள் உறவினர்கள் அருகிலேயே இருக்க வேண்டும்! மனோரி

Report Print Ajith Ajith in அரசியல்

விசாரணை நடத்தும் நீதிமனங்கள் தங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும்காணாமல்போனோரின் உறவினர்கள் விரும்புவதாக நல்லிணக்க செயலணியின் தலைவர் மனோரிமுத்தெடுவேகம தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க செயலணி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விசாரணைகளையும்,யோசனைகளையும் பொதுமக்கள் மற்றும் அமைப்பு சார்ந்தவர்களிடம் பதிவு செய்தது.

இதற்கமைய, காணாமல்போனோரின் உறவினர்கள் உள்ளிட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டமக்கள் பெரும்பாலும் சட்டம் மற்றும் விசாரணைகள் குறித்த அறிவினையும் பொருள்வளத்தையும் கொண்டவர்களாக இல்லை.

அவர்கள் கொழும்பிலோ, வெளிநாடுகளிலேயே தங்களுக்கான விசாரணை நீதிமன்றங்கள் அமைவதைவிரும்பவில்லை.

விசாரணை நடத்தும் நீதிமனங்கள் தங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்றே அவர்கள்விரும்புகிறார்கள் என நல்லிணக்க செயலணியின் தலைவர் மனோரி முத்தெடுவேகமதெரிவித்துள்ளார்.

Comments