அமெரிக்க தூதரகத்துக்கு கீழ் காணப்படும் காணியை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்
167Shares

அமெரிக்க தூதரக அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற இரணவில பூமியை மீண்டும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில், இரணவில பிரதேசத்தில் அமைந்துள்ள 166.038 ஹெக்டேயர் இடப்பகுதியை, Voice of America thndhyp வானொலி ஒலிபரப்பு நிலையத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்காக வேண்டி 1991ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகத்திற்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

அந்த குத்தகை ஒப்பந்தத்தின் காலம் முடிவடைவதற்கு முன்னர் குறித்த ஒலிபரப்பு நிலையத்தை மூடிவிட்டு குறித்த இடம் மற்றும் சொத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்து குறித்த இடத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments