அடுத்து வருகிறது அரசாங்கத்தின் ஐந்தாண்டு தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம்

Report Print Ajith Ajith in அரசியல்
52Shares

2017 முதல் 2021 ஆண்டு வரையான ஐந்தாண்டு தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம் (2017 – 2021) இனை தயாரிப்பதற்கு மற்றும் அதன் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்களையும் கவனத்திற் கொள்வதற்காக வேண்டி அமைச்சர்கள் சிலரின் இணை தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவை குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை கடந்த வருடம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனடிப்படையில் குறித்த குழுவின் பூரண கருத்துக்களை பெற்று தயாரிக்கப்பட்ட ஐந்து வருட ‘தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம் (2017 – 2021)’ ஆனது பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷா டி சில்வாவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments