புதிய அரசமைப்பு தொடர்பில் ரத்தன தேரரின் கருத்தை நிராகரிக்கின்றது அரசு..!

Report Print Rakesh in அரசியல்
151Shares

புதிய அரசமைப்புப் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் கூறியுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன்தான் அரசமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், அரசமைப்பு என்று ஒன்றும் இதுவரை தயாரிக்கப்படவில்லை. அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களும் குறித்த பணிகளில் உள்வாங்கப்பட்டுத்தான் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக மஹிந்தவின் ஆதரவாளர்களும் உங்வாங்கப்பட்டுள்ளனர். வழிநடத்தல் குழு மற்றும் உபக்குழுகளின் விவாதங்களில் அனைவரும் கலந்துகொள்கின்றனர்.

அங்கு எதனையும் தெரிவிக்காது வெளியில் வந்து வேறுவிதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதுவரை அரசமைப்புத் தொடர்பான சட்டமூலம் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துரலிய ரத்தன தேரர் குறித்த விடயம் தொடர்பில் அறியாது தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Comments