கூட்டு எதிர்க்கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோசடிகள் குறித்து எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னதாக அம்பலப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
ஏற்கனவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் மோசடிகள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோசடிகள் குறித்து முதலில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.
பின்னர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்படும்.
குருணாகல், கண்டி, மாத்தறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு குற்றம் இழைத்துள்ளனர் என காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.