அரசை கவிழ்க்க முனையும் மஹிந்த அணி அமைச்சு பதவி கோரி கியூவில்...

Report Print Samy in அரசியல்
101Shares

அரசாங்கத்தை விமர்சிக்கும் மஹிந்த அணியினரில் பலர் அமைச்சுப் பதவி வழங்கினால் இன்றே அரசாங்கத்தில் இணையத் தயாராகவுள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பல தடவைகள் பலரும் தனியே சந்தித்து இது தொடர்பில் பேசியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் அமைச்சுப் பதவி வழங்கக் கூடிய கால எல்லை முடிவடைந்து விட்டதால் எதையும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

நுகேகொடை மக்கள் பேரணிக்கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்; அரசியல் செய்ய எதுவும் இல்லாதவர்கள் மக்கள் பேரணிக் கூட்டம் என்ற பெயரில் நுகேகொடையில் கூட்டம் நடத்தப் போகின்றனர்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக இதுவரை எத்தனையோ நடவடிக்கைகள், வாய்ச்சவடால் இட்டவர்கள் இப்போதும் அதைக் கூறியே மக்களை ஏமாற்ற நுகேகொடையில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது; ‘மஹிந்த அணி கூட்டு எதிர்க்கட்சியினர் ‘மொட்டு’ சின்னத்தில் நுகேகொடையில் பாரிய அரச எதிர்ப்பு மக்கள் பேரணிக் கூட்டமொன்றை நடத்தவுள்ளனரே அது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல; வரவு செலவுத் திட்டத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக புரளியைக் கிளப்பிவந்த கூட்டு எதிர்க்கட்சியினர், அதன்பின்னர் அப்போது வீழ்த்துவோம்,

இப்போது வீழ்த்துவோமென அடிக்கடி கூறி வருகின்றனர். அரசாங்கத்தோடு இணைந்து கொள்ள அவர்களில் 15-–20 பேர் தயாராக உள்ளனர்.

அமைச்சர் பதவி வழங்கினால் உடனடியாகவே அவர்கள் வந்துவிடுவர். எனினும் அமைச்சர் பதவி வழங்கக் கூடிய கால எல்லை முடிந்து விட்டது.

இனி எவரையும் அமைச்சராக இணைத்துக் கொள்ள முடியாதுள்ளது.

பாராளுமன்றத்தில் எம்மோடு தனியாக சந்திக்கும் சந்தர்ப்பங்களில் இது பற்றி அவர்களில் பலர் எம்முடன் பேசியுள்ளனர்.

எனினும் என்ன செய்வது இனியும் அமைச்சர் பதவிகளை வழங்க முடியாதுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments