சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கு கிடைத்த கௌரவம்! மகிழ்ச்சியில் ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்
271Shares

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கு ஆகக்கூடுதலான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி திருமதி டொரிஸ் லீலெதாட் (Doris Leuthard) பாராட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இடையிலான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் உறுதி செய்யப்படும். தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் காட்டும் ஆர்வத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போதைய அரசாங்கம் ஜனநாயக மற்றும் நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை பாராட்டினார்.

வலுவான இலங்கையை உருவாக்குவதே சமகால அரசாங்கத்தின் நோக்கமாகும். சமகால அரசாங்கம் இலங்கையின் எதிர்காலத்திற்காக முன்னெடுக்கும் பரந்த வேலைத்திட்டத்தை சுவிட்சர்லாந்து ஜனாதிபதி பாராட்டினார்.

சுவிட்சர்லாந்தை கேந்திரமாகக்கொண்ட நெஸ்லே போன்ற நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட முதலீடு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் விடயங்களைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை தொடர்பில் சுவீடன் மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வலிமை மிக்க இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேசிய வேலைத்திட்டத்தை பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தினார்.

எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு மாநாடொன்றை சுவிட்சர்லாந்தில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Comments