துறைமுக அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு

Report Print Nivetha in அரசியல்

துறைமுக அமைச்சர் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம் மற்றும் முதலீட்டு திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தேவையான ஆவணங்களை துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இரகசியமாக வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தாக்கல் செய்யத் தேவையான இரகசிய ஆவணங்கள் மற்றும் சட்டத்தரணி உதவிகளை அர்ஜூன ரணதுங்க வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டத்திற்கு தாம் நினைத்த நிறுவனத்திற்கு சந்தர்ப்பம் வழங்கி தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து கொண்டே அதற்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும் அர்ஜூனவின் சகோதரர் பிரசன்ன ரணதுங்க ஊடாக இந்த ஆவணங்கள் வாசுதேவவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments