புதிய அரசியல் அமைப்பின் ஒரு சரத்தேனும் இன்னும் உருவாக்கப்படவில்லை?

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய அரசியல் அமைப்பின் ஒரு சரத்தேனும் இன்னும் உருவாக்கப்படவில்லை என பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியல் அமைப்பு பற்றிய யோசனைகள் மட்டுமே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைகள் தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் ஊடகங்களின் முன்னிலையில் பகிரங்கமாக பேசப்பட உள்ளது.

அதன் பின்னரே அரசியல் சாசனம் உருவாக்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

கடந்த காலங்களை உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்களை விடவும் இந்த அரசியல் அமைப்பு திறந்த தன்மையை கொண்டிருக்கும்.

சில தரப்பினர் வெறுமனே புதிய அரசியல் அ மைப்பு பற்றி பீதியை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்தவின் முறைமைகளையே பின்பற்றுகிறது ஐ.தே.க – கிரியெல்ல

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த முறைமைகளையே, ஐக்கிய தேசிய கட்சி பின்பற்றுவதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக நாம் அதிகாரங்களை நாம் பகிர்ந்திருந்தோம். 13 ஆவது திருத்தத்தின் கீழான அதிகார பகிர்வு போதுமானது இல்லை எனக் கூறியவர் மஹிந்த ராஜபக்சதான் 13 பிளஸ் தீர்வை வழங்குவதாக கூறியிருந்தார் என்றும் அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்சவின் அனுசரணையுடன் ஒருவருடமாக மேற்கொள்ளப்பட்ட சர்வகட்சி பேச்சுவார்த்தையில் எந்தவொரு பிரதிபலனும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையியில், மஹிந்த கூறியதையே இன்று ஐக்கிய தேசிய கட்சி செய்கின்றது. 13 ஆவது திருத்ததிற்கு அப்பால் சென்று எதனை வழங்க முடியும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம்.

இந்தப் பணிகள் இறுதி செய்யப்பட்டதன் பின்னர், இறுதி தீர்மானம் நாடாளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Comments