இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தற்போது மிகச் சிறந்த உறவு நிலவுவதாகவும் புரிந்துணர்வு அதிசிறப்பாக உள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள பொன்சேகா, இருதரப்பும் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்பும் உணர்வுகளைப் புரிந்து நடக்க வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு கரிசனைகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும் போது இரு நாடுகளினதும் தற்போதைய அரசியல் உறவுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.