ஜனவரி 26ஆம் திகதிக்கு முதல் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இறந்து விடுவார் என்ற விமர்சனங்கள் அண்மைக்காலமாக பரவலாக பேசப்பட்டது.
இந்த விமர்சனங்களை எழுப்பியவர் விஜித் ரோஹன விஜேமுனி எனப்படும் இலங்கை சோதிடராவார்.
குறித்த சோதிடர் நேற்றைய தினம் மீண்டும் ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளதாவது, காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
நான் அரசியல் இலாபங்களுக்காகவோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்காகவோ செயற்படவில்லை. எனது பதவியை பறித்தவர் மஹிந்தவே அவருக்கும் எனக்கும் எந்த விதமான நட்பும் இல்லை.
மைத்திரி வெற்றி பெறுவார் என நான் தெரிவித்தபோது மகிழ்ச்சியடைந்தவர்கள் இப்போது அவர் இறந்து விடுவார் என ஆரூடம் கூறுகின்ற போது கசக்கின்றதா?
இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை விடவும் ஏனையவர்களுக்கே அதிக குடைச்சலாக இருக்கின்றது.
மிக முக்கியமானது எதிர் வரும் 26ஆம் திகதி மைத்திரி மரணித்து விடுவார் என நான் தெரிவித்திருந்தேன். அதற்கான நாள் நெருங்கி வருகின்றது ஆனால் ஜனாதிபதி நன்றாகவே உள்ளார்.
எனினும் சனிப் பெயர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி எதிர் வரும் ஒக்டோம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் மைத்திரியின் மரணம் நிறைவேறும். இதனை சோதிட அடிப்படையில் மட்டுமே கூறுகின்றேன்.
அரசியல் விமர்சனமாக இதனை மாற்ற முயற்சி செய்யும் பலர் எனது முகநூல்பக்கத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் எனது முகநூல் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
அது மட்டுமல்ல என்னை திட்டும் நாய்களுக்கு நான் அஞ்சப்போவதும் இல்லை. சிங்கம் எப்போதும் புல் தின்னாது அப்படியானவனே நான்.
யாருக்கும் பயந்தவனும் அல்ல நான் பொறுத்திருந்து பாருங்கள் இந்த மரணம் நடக்கின்றதா இல்லையா என அதன் பின்னர் பார்ப்போம். இது நடக்காவிட்டால் இனிமேல் நான் சோதிடம் கூறப்போவதும் இல்லை.
ஒக்கோம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் இந்த மரணம் நிச்சயமாக நிறைவேறும் எனவும் விஜேமுனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.