மகிந்தவின் வீட்டில் கொட்டும் பணம்..! - மகிந்தவும் கோத்தபாயவும் கைது செய்யப்படுவார்களா?

Report Print Mawali Analan in அரசியல்
1326Shares

நாட்டில் பாரிய குற்றங்களை செய்த மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் கைது செய்யப்படாமல் இருப்பது எவ்வாறு என தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

சுவிஸ் வங்கி, டுபாய் வங்கி உட்பட பல வங்கிகளில் ராஜபக்சர்களுக்கு உள்ளது. அரசு காணிகளில் மூலம் வருமானம் கிடைக்கின்றது அவை மகிந்தவின் வீட்டில் கொட்டுகின்றது.

27ஆம் திகதி வீதியில் இறங்கப்போகின்றார்களாம், இனிமேலும் மகிந்தவை நம்பி மக்கள் செல்லமாட்டார்கள்.

மேலும் மகிந்த அல்லாத வேறு நபர்கள் வெள்ளை வேன் கலாச்சாரத்தை உண்டு பண்ணி இருப்பார்களாயின், ஊடகங்களை கொளுத்தியிருப்பார்களாயின், கொலைகளையும் ஊழல்களையும் செய்திருப்பார்களாயின்.,

அவர்கள் 50 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இவற்றை செய்த மகிந்தவும் கோத்தபாயவும் சுதந்திரமாக இருக்கின்றார்கள்.

அப்படி அவர்களை சுதந்திரமாக ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள். அரசுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

அவர்களை கைது செய்யாத நீதி என்ன நீதி. ஏன் அவர்களை கைது செய்ய வில்லை அரசு அவர்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளதா? எனவும் அசாத் சாலி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments