கூட்டமைப்பின் கேள்விக்கு விஜயகலா மகேஸ்வரன் பதிலடி

Report Print Sumi in அரசியல்
769Shares

அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கட்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும் கட்சியை வளர்ப்பதற்காகவே செயற்படுகிறார்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று(18) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியை வளர்ப்பதற்காகவா, பொருத்துவீட்டினை மக்களிடத்தில் திணிக்கின்றீர்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அமைச்சர் விஜயகலாவிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அவர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வளர்க்கவில்லை. மாறாக ஐக்கியதேசிய கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையும் வளர்ப்பதற்காக செயற்படுகின்றார்கள்.

அபிவிருத்தி கூட்டம் என்றால், அபிவிருத்தி தொடர்பாக மட்டும் கதையுங்கள் கட்சியைப் பற்றி கதைக்க வேண்டாம் என பதிலளித்தார்.

மேலும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கூறுவதுடன், கட்சியும் வளர்க்க வேண்டும் தான், ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மக்களை மீண்டும், மீண்டும் படுகுழியில் தள்ளுவதற்கு நாங்கள் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

பொருத்துவீட்டினைப் பற்றி கதைக்க அதற்குரிய அமைச்சர் தற்போது இங்கு இல்லை. பொருத்து வீட்டினை வழங்குவதற்கு நாமும் அனுமதிக்கமாட்டோம்.

எனவே இவ்விடத்தில் பொருத்துவீடுகள் தொடர்பாக கதைப்பது பொருத்தமானதாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.


You may like this..

Comments