எனது வழக்கு விசாரணையில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் பிரசன்னமாக வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்
62Shares

எனது வழக்கு, விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் பிரதிநிதிகள் வழக்கு விசாரணைகளின் போது பிரசன்னமாகியிருக்க வேண்டும். இதற்கான சாத்தியங்கள் உண்டா என ஆராய்ந்து வருகின்றேன்.

எனக்கு எதிரான குற்றச்சாட்டு மிகவும் வித்தியாசமானது. அரசியல் மேடையில் ஆற்றிய உரை ஒன்றின் அடிப்படையிலேயே எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக எனக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் ஜனாதிபதியின் வெற்றியை தடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் எனக்கு நீதி கிடைக்கும் என்பதனை நம்புகின்றேன்.

நான் அரசியலை விட்டு விலகிக்கொள்ளவில்லை. மக்களினால் அதிகம் நேசிக்கப்படும் மக்களுக்கு அதிகம் தேவையான அரசியல் சக்தியுடன் இணைந்து கொள்வேன்.

நாட்டில் தற்போது நிச்சயமற்றத் தன்மை நிலவி வருகின்றது. ரத்ன தேரரின் புதிய அரசியல் சக்தியுடன் இணைந்து கொள்வது குறித்தும் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments