எதிர்க்க ஒன்று திரண்ட பிக்குகள்..! நாமல் விடுத்துள்ள புதுச் சபதம்!!

Report Print Mawali Analan in அரசியல்
726Shares

நாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்று வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்ட போதே மத்தல விமான நிலையத்தை அரசு தேடுகின்றது.

அப்போது மத்தல விமான நிலையத்தை நெல் களஞ்சியமாக கூறினார்கள் இன்று பொதுமக்களுக்கு உண்பதற்கு அரிசி இல்லை.

அதேபோல் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அரசியல் யாப்பு நாட்டை பிளவு படுத்தும் திட்டமே. இதனை நாம் சொல்லவில்லை இப்போதைய ஆட்சிக்கு வித்திட்ட அத்துரலிய ரத்தன தேரரே கூறியுள்ளார்.

இதனைப்பற்றி நாம் பேசினாலோ, நாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ சிறைச்சாலைக்கு கொண்டு செல்கின்றார்கள்.

இந்த ஆட்சிக்கு நாம் தீர்மானமாக சொல்லிக் கொள்கின்றோம் நாட்டை பிளவு படுத்தும் யாப்பிற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் நாமல் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் வீரக்கெட்டிய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பிக்குகளும் பொதுமக்களும் ஒன்று திரண்டு அண்மையில் அம்பாந்தோட்டையில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவும் திட்டம் தீட்டியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமல் ராஜபக்சவும் ஆதரவாளர்கள் சகிதம் கலந்து கொள்ள வருகைத் தந்திருந்தார்.

எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் பௌத்த வழிபாட்டோடு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments