பிராந்தியத்தில் சீனா அச்சுறுத்தலா? தெற்காசியாவில் இலங்கையின் நிலை என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

சீனா - இலங்கை இணைந்து செயற்படுவதன் ஊடாக இலங்கைக்கு மாத்திரமின்றி முழு தெற்காசியாவுக்கும் நன்மை கிடைக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனா உறவு தொடர்பில் ஜப்பான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் சீன ஊடகமொன்று மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

சீனா, இலங்கையுடன் அதிகமாக நெருக்கமாகியுள்ளமையின் ஊடாக ஜப்பான் மற்றும் இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக ஜப்பான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையை இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதற்கான மத்திய நிலையமாக பயன்படுத்துவதற்காகவே இலங்கையில் சீனா முதலீடுக்காக மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறான கொடுக்கல் வாங்கல் மூன்றாவது தரப்பினருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த உறவு தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ளாமல் இலங்கையில் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய உதவி செய்யுமாறு சீனா அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த இரண்டு நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்வதற்கு தாமதமாகியமயினால் சீனா அந்த கடமையை நிறைவேற்றியுள்ளதாக சீன ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Comments