அனுரவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

Report Print Ramya in அரசியல்
97Shares

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பான வழக்கு இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது.

தாஜூடின் கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவின்முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரையும்,அடுத்த மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறுகொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை,வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின்இருக்கையில் சென்ற நபர் தொடர்பில் சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்ததாககுற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில்அறிவித்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் நீதவான் இதன் போதுஉத்தரவிட்டுள்ளார்.பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்மமுறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments