உடனடியாக எதுவும் செய்ய முடியாது'!- பன்னீரிடம் மோடி கைவிரிப்பு

Report Print Samy in அரசியல்
269Shares

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.

மாநிலம் முழுவதும் போராட்டம் விரிவடையும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் விதமாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தமிழர்களின் உணர்வுகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் பிரதமரிடம், முதல்வர் எடுத்துரைத்தார்.

இதனை கேட்டுக் கொண்ட பிரதமர், கலாசாரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு கலாசாரம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது.

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்- பிரதமர் மோடி சந்திப்பில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நல்ல முடிவு கிடைக்கும் என்று தமிழக மக்கள், போராட்டக்காரர்கள் நினைத்திருந்த வேளையில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும் வழக்கை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி கூறியிருப்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமரின் இந்த கருத்தால் தமிழகத்தில் போராட்டம் மேலும் வலுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Vikatan

Comments