சிறந்த கட்சி உறுப்பினர்கள்-ரணிலை முந்திய புத்திக்க

Report Print Ramya in அரசியல்
83Shares

இலங்கை அரசியல் கட்சிகளில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொடர்பானவிபரம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வகையில்,நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி,மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில்திறமையாகசெயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றியே தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு 09ம் மாதம் 01ம் திகதி முதல் 2016ம் ஆண்டு 08ம் மாதம்31ம்திகதி வரையிலான காலப்பகுதி வலையிலேயே இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், புத்திக்க பத்திரன, பந்துல குணவர்தன, அனுர குமார திஸாநாயக்கமற்றும் சுமந்திரன்ஆகியோர் முறையே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி,மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில்திறமையாகசெயற்ப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை,நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றஉறுப்பினர் புத்திக்க பத்திரன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முந்தி முதலாம்இடத்தைபிடித்துள்ளார்.

Comments