திருகோணமலை இந்தியாவிற்கு...! ஹம்பாந்தோட்டை சீனாவிற்கு..! உடன்படிக்கை கைச்சாத்து ?

Report Print Vino in அரசியல்

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை அடைந்திருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேணும் வகையில் இத்துறைமுகத்தை இலங்கை பயன்படுத்தி வந்தது.

அதேவேளை சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு சிறிய இலாபத்தை கூட பெற்றுத் தரவில்லை, இதனால் நாட்டிற்கு பாரிய கடன்சுமையே ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே அந்த துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

மேலும் திருகோணமலையில் நடைபெறும் திருத்த வேலைகள் முடிந்ததும் இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Comments