வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான செயற்திட்டங்கள் தொடர்பில் கனேடிய சர்வதேச முகவர் அமைப்புடன் (சீடா) வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி தொடர்பான சர்வதேச கருந்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு கனடா சென்றுள்ள அமைச்சர் சத்தியலிங்கம் தலைமையிலான குழு நேற்று (18) கனேடிய சர்வதேச முகவர் அமைப்பினரை சந்தித்துள்ளனர்.
மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் குளோறியா விஸ்மன் தலைமையிலான பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திறன்விருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.