இன்றைய நாளில் நாளைய தினத்திற்காக தயாராக வேண்டும்: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்
28Shares

நிரந்தர அபிவிருத்தியின் சமூக ரீதியான பொறுப்பை நிறைவேற்றுவதில் உண்மையான யதார்த்தவாத செய்தியை கொண்டு சேர்ப்பவர்கள் பாடசாலை மாணவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில், நாளைய தினத்திற்காக உடனடியாக தயாராக வேண்டிய காலம் என்பதால், நாம் செய்ய வேண்டிய பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

திகணை கொங்கல்ல மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற நிரந்தர அபிவிருத்திக்கான பாடசாலை சங்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடல் வளத்தை பாதுகாக்கும் நாடாக மாற வேண்டுமாயின் நாட்டின் வன வளத்தின் கனத்தை 50 வீதம் என்ற மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மாத்திரமல்லாது சுற்றாடல் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட அனைவரும் இயற்கை வளத்தையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Comments