எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வீமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், மாநாட்டில் பிரதான உரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்தவுள்ளார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அன்றைய தினத்தில் மேற்கொள்ளவிருந்த பல வேலைகளை இரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.