இப்படி ஓர் ஜனாதிபதியா? மக்களை வியப்பில் ஆழ்த்திய மைத்திரி..!

Report Print Mawali Analan in அரசியல்
3418Shares

இலங்கை வரலாற்றில் எளிமையான வாழ்க்கை வாழும் பெருமையை கொண்ட ஜனாதிபதியாக மைத்திரி பால சிறிசேன திகழ்ந்து வருகின்றார்.

தன் மீதான விமர்சனங்களை சாதகமாக மாற்றி ஆட்சி புரிந்து வரும் மைத்திரி இன்றைய தினம் கிடார் வாசித்து அசத்தியுள்ளார்.

ஒரு நிலையான பள்ளி சமூக திட்டத்தை நிறுவும் வேலைத்திட்டம்” இன்று ஜனாதிபதி தலைமையில் கென்கல்லை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் ஜனாதிபதி பாடசாலை மாணவர்களுடன் சகஜமாக உரையாடியதோடு, பேன்ட் வாத்தியக் குழு மாணவி ஒருவரின் கிடார் ஒன்றினை ஜனாதிபதி வாசித்ததோடு பாடலையும் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இவர் இத்தகைய எளிமையான ஜனாதிபதியா என பொதுமக்களும், மாணவர்களும் வியப்போடு ஜனாதிபதியை நோக்கியுள்ளார்கள்.

அண்மையில் பாராளுமன்ற கட்டடத்தில் வீட்டில் இருந்து பொதி சோறு கட்டிக்கொண்டு ஜனாதிபதி சென்று உண்ட விடயமும் ஊடகங்களின் வெளிவந்தன.

இவ்வாறான செயற்பாடுகளால் மக்களுக்கு பிடித்த ஓர் தலைவராக மைத்திரி வலம் வந்து கொண்டிருக்கின்றார் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments