யோசனைகள் தெரிவித்ததால் பதவி பறிக்கப்பட்டது - அமைச்சர் விசனம்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஆட்சியில் யோசனைகள் தெரிவித்ததால் என்னுடைய பதவி பறிக்கப்பட்டது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக இந்த இணக்கப்பாடுகளுக்கு தற்போதைய அரசாங்கம் மாத்திரம் இணங்கவில்லை.

கடந்த அரசாங்கங்களும் இணங்கின. அந்த இணக்கப்பாடுகளை செயற்படுத்துவது மாத்திரம் தற்போதைய அரசாங்கத்தின் பணி.

நாட்டில் உரிமைகளை முன்னேற்றுவதற்காகவே இணக்கப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

இது சர்வதேசத்தின் தேவையை நிறைவேற்றும் நடவடிக்கையல்ல.

மேலும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையான நீடித்த காலத்திற்கு கிடைக்கும் ஒன்றல்ல.

முன்வைத்துள்ள 27 விடயங்களையும் எந்த நாடும் அமுல்படுத்தவில்லை. முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களில் சமஷ்டி யோசனை உள்ளடக்கப்படவில்லை. சமஷ்டி யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது.

கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் இந்த இணக்கப்பாடுகள் காணப்பட்டன. அவற்றை செயற்படுத்தும் முக்கியத்துவம் குறித்து நான் நேரடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இதனால், என்னிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பொறுப்பு பறிக்கப்பட்டது.

சர்வதேச கொள்கைகள் குறித்து செவி கொடுத்து கேட்டகாமையானது மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

வெளிநாட்டு அழுத்தங்களே அரசாங்கம் கவிழ காரணமாக அமைந்தன எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments