ஜனாதிபதி தனது கட்சியினருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்ரமபாகு

Report Print Steephen Steephen in அரசியல்
57Shares

ஜனாதிபதித் தேர்தலில் தான் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் தனது கட்சியின் உறுப்பினர்கள் சம்பந்தமாக உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். வழங்கிய வாக்குறுதியின் படி பயணத்தை முன்னெடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார். அதிகார பரவலாகத்திற்கு நாங்கள் தயாரில்லை.

13 வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்ல நாங்கள் தயாரில்லை என சுதந்திரக் கட்சியினர் கூறுகின்றனர். அவர்கள் பற்றி ஜனாதிபதி என்ன சொல்ல போகிறார். ஜனாதிபதி அவர்களின் வாயை மூட வேண்டும் அல்லது கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

நீங்கள் அந்த வழியில் செல்லுங்கள் நான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலான வழியில்தான் செல்வேன் என ஜனாதிபதி தனது கட்சியினருக்கு கூற வேண்டும் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Comments