நாட்டின் இறையாண்மையை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்க முடியாது: நீதியமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்
43Shares

இலங்கையின் சட்ட மறுசீரமைப்புக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரதிபலன்களை எதிர்பார்த்து இலங்கையின் இறையாண்மையை அரசாங்கம் வெளிநாட்டவரிடம் காட்டிக்கொடுக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறைக்கு எப்போதும் சவால்கள் இருக்கின்றன. நாட்டில் தற்போது புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவது சர்ச்சையான வாத விவாதங்கள் நடந்து வருகின்றன.

சில சந்தர்ப்பங்களில் சர்வதேசத்தில் இருந்து அழுத்தங்கள் வருகின்றன. நாட்டில் என்ன சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

எனினும் நாங்கள் அதற்கு தயாரில்லை. பொருளாதார ரீதியாக கிடைக்கும் பிரதிபலன் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.

அதற்காக நாட்டின் இறையாண்மையை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்க நாங்கள் தயாரில்லை எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Comments