நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சர்வதேச முகவர்களின் ஒற்றர் என லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துரலியே ரத்ன தேரர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியமை ஒரு சதித்திட்டம்.
இப்படியான நரித்தன அரசியலில் ஈடுபடும் எவரும் கிடையாது.
ரத்ன தேரர் சர்வதேச முகவர்களின் ஒற்றராக செயற்படுகிறார்.
தேசிய அமைப்பை உருவாக்கும் தார்மீகமான உரிமை அவருக்கு இல்லை எனவும் பத்தேகம சமித தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.